ஹொரணை, இங்கிரிய பகுதியில் பாணில் நத்தை ஒன்று இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பேக்கரி பொருட்களை வினியோகிக்கும் நடமாடும் வாகனத்தில் கொள்வனவு செய்த பாணில் நத்தை இருந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையாளருக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக எதுவும் செய்ய இயலாது என பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
#SrilankaNews