IMG 20211114 WA0057
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்காக அல்ல!

Share

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ் மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் தெரிவித்தார்.

அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற போது, தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்ற வே அரசியல்வாதிகளின் சொல்வதைச் செய்பவர்கள் அல்ல என யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன். நான் இன்று நேர்மையான அதிகாரி என எல்லாராலும் சொல்வதற்கு காரணம் என தந்தை மற்றும் என்னை கற்பித்து வழிநடத்திய ஆசிரியரும் குறிப்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் என்னுடன்பல நேர்மையான அரச உத்தியோகத்தர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாக ஒரு குழு அணியாக நாங்கள் கடமையாற்றியிருந்தோம்.

அதன் காரணமாக பெருமளவு நிதியினைப் பெற்று யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.

தற்போது பலரும் கூறுகின்றார்கள் 65 வரை ஓய்வு காலம் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனக்கு தெரியும் நான் இந்த கால கட்டத்தில் என்னால் கடமையாற்ற முடியாது.

நான் நேர்மையாக கடமையாற்றியதன் காரணமாக தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து என்னால் கடமையாற்ற முடியாது. அதன் காரணமாகவே என்னை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சித்தார்கள் எனினும் நான் ஓய்வினை பெற்றுக்கொண்டேன்.

நான் கடமையாற்றிய காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் முன்னுரிமை கொடுத்துச் செற்பட்டத்தியதில்லை. அது அனைவரும் அறிந்ததே அனைவருக்கும் சமனாகவே ஆகவே நான் செயற்பட்டேன்.

அத்தோடு சிலர் பிழையான பய விடயங்களை செய்யச் சொல்லி கூறுவார்கள் நான் கூறுவேன் அவ்வாறு செய்ய முடியாது. எனவே தற்போதுள்ள நிலையில் சில பிழையான விடயங்களை செய்யத்தூண்டியவர்களுடன் என்னால் கடமையாற்ற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...