கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர்.
நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர்.
கொரோனா முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா வழங்கினீர்கள். இப்போது 2 ஆயிரம் ரூபா வழங்குகிறீர்கள். இந்த பயனாளர் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது. எல்லோருக்கும் இந்த கொடுப்பனவு சென்றடைகிறதா என்று எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது சபையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சபையில் இருக்கவில்லை .
கோபம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உங்கள் அரசுக்கு நாடாளுமன்ற நடைமுறை தெரியாதா? கேள்விக்கு பதில் வழங்குவதற்கு சபையில் துறை சார்ந்த அமைச்சர் இல்லை என கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment