சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சினோபோர்ம் தடுப்பூசியால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சினோபோர்ம் தடுப்பூசி போட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 7 சதவீதமானோருக்கு நோய் எதிர்ப்பு இல்லை. இதனை நிவர்த்தி செய்ய பைஸர் தடுப்பூசி சிறந்த வழி.
கொரோனாத் தொற்றால் இறந்தவர்களில் 19 சதவீதமானவர்கள் இரு டோஸ்களையும் பெற்றவர்களே என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment