மீண்டும் வெடித்தது கேஸ் அடுப்பு!!

தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த பின்பு அதனை, அணைத்துவிட்டு குறித்த நபர் வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்படி நபர் தெரிவித்தள்ளார்.

gas 02

வெடிப்பை அடுத்து கேஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டின் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version