சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் அதிரிப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று லாஃப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு அரசு அனுமதி வழங்கினால் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 147 ரூபாவாக அதிகரிக்கும்.
கடந்த மாதம் லாஃப் நிறுவனத்தின் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment