உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
Nuwara Eliya- ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது, இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக உணவகம் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த உணவுகளும் பாழடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
#SrilankaNews
Leave a comment