பம்பலப்பிடி பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
4 அடுப்புகள் அடங்கிய எரிவாயு குக்கர், சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் போன்றன வெடித்து சிதறியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். எரிவாயு சிலிண்டரை தான் சில நாட்களுக்கு முன்னரே வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னரே ரெகுலேட்டர் மற்றும் குழாயை குக்கர் கொள்வனவு செய்த நிறுவனத்தினரிடம் தெரிவித்து அதில் குறைபாடுகள் இல்லை என சான்றிதழ் பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் எரிவாயு அடுப்பு இன்று இயக்கப்பட்ட தருணத்தில் வெடித்து சிதறியுள்ளது.
#SriLankaNews
Leave a comment