யாழில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவம்

Gas 4

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது.

எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version