நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது மின்நெருக்கடியை சமாளிப்பதற்கான முகாமைத்துவ பொறிமுறை தொடர்பில் ஆராயப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தெரு மின் விளக்குகளை ஒளிரவிடாமல் இருத்தல், அரச நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் சகிதம் மின்சாரத்தை பயன்படுத்தல் உள்ளிட்ட மேலும் பல யோசனைகளை மின்சக்தி அமைச்சு முன்வைக்கவுள்ளது.
#SriLankaNews
.
Leave a comment