ஜப்பானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 10 ஆவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பானில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட புமியோ கிஷிடா, பிரதமராகவும் பதவியேற்றார்.
இதனைத்தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய அரசு வாக்காளர்களின் ஆணையைப் பெற விரும்புவதாகக் கூறி நாடாளுமன்ற கீழவையை கலைத்து, தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் 465 இடங்களை கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் புமியோ கிஷிடா, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
#world
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			         
 
			        
Leave a comment