மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பகல் வேளைகளில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் மிகக்கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment