pearl one news Kanapathipillai Mahesan
செய்திகள்இலங்கை

யாழில் வழமையான செயற்பாடுகளுக்கே எரிபொருள்! – யாழ் அரச அதிபர்

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் முண்டியடித்து சேமித்து வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை.

அத்தோடு வழமைபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்.

அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல்,சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...