சதோச (Sathosa) நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலால, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜோஹான் பெர்னாண்டோ சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனத்தை ஒரு தனிநபர் தவறாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தமை. அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியாகவும், அதற்கு உடந்தையாகவும் இருந்தமை.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.