முன்னாள் நிதியமைச்சர் மங்கள கொவிட்டால் உயிரிழப்பு!
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையிலேயே அவர் இன்று அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர (வயது-65) இலங்கை அரசியலில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment