உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடாது!

gl7

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் வெளிநாடுகளுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளில் வெளிநாடுகள் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர்களின் வடக்கு பயணம் குறித்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களை எதிர்பார்த்த நிலையில் சீனா இது தொடர்பில் இதுவரை அக்கறை செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர், சீனா மட்டுமல்ல எந்தவொரு வெளிநாடுகளுக்கும் இறையாண்மையுள்ள நாடுகளின் உள்விவகார விடயங்களில் தலையிட அதிகாரமில்லை என தெரிவித்தார்.

அத்தோடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்கத் தயாராகவுள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் அதனை புறக்கணிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

 

Exit mobile version