usa
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் மீண்டும் வெளிநாட்டு பயணிகள்!

Share

அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணிகளை தன்னாட்டுக்கு வர அனுமதியளித்துள்ளது.

அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்துள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை தன் நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமென தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

கொரோனா வைரசின் முதல் அலையின்போது அமெரிக்கா கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

இவ் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பங்குனி மாதம் தனது தரை வழி எல்லைகளை மூடிய அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பயணிகள் வருவதற்கும் தடை விதித்தது.

அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் விதித்த இந்த தடையை அவருக்கு பின் கடந்த தைமாதத்தில் பதவிக்கு வந்த ஜோ பைடன் மேலும் நீடித்தார்.

இதனால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பயணத் தடை குடும்பங்களை பிரித்து, சுற்றுலாவை முடக்கியது.

இந்தநிலையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகள் கார்த்திகை மாதம் 8-ந்தேதி முதல் அமெரிக்கா வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக சர்வதேச பயணிகளுக்கான புதிய பயண கொள்கையையும் ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனாதொற்று இல்லை எனும் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா நேற்று தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகளை நாட்டில் நுழைய அனுமதித்தது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிக அளவில் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...