யுகதனவி மீள்பரிசீலனைக்கு!! – வாசுதேவ கோரிக்கை

Vasudeva Wasudeva

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” யுகதனவி உடன்படிக்கை எமக்கு மாற்றுவழியில்தான் கிடைத்தது. அதிலுள்ள உள்ளடக்கங்கள் பாதகமானவை. எனவே, அது மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆரம்பக்கட்ட ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனை மாற்றலாம். ஏனெனில் இது விடயத்தில் அரசியல் மட்டத்திலான தீர்மானமே தாக்கம் செலுத்தும்.”- என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் யுகதனவி தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version