வெள்ளத்தில் தத்தளிக்கும் யாழ் குடாநாடு (வீடியோ)

nallaru03

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.

வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான பொலிசாரால் அறிவிக்கப்பட்டு வீதித்தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு, இன்று அதிகாலை முதல் கன மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன.

இதேநேரம் யாழ். நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தி நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நீர் தேங்கி இருப்பதினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகரில் கழிவு நீர் ஓடும் கால்வாய் வாய்க்கால் கலங்காம சீரமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version