முகக்கவசம் அணியுமாறு கூறியதால் ஆத்திரத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

Russia

ரஷ்யாவில், முகக்கவசம் அணியாமாறு பாதுகாவலர் கூறியமையால், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் மொஸ்கோவில் உள்ள அரசு பொதுச்சேவை மையத்திற்கு வந்த 45 வயது நபரையே அங்கிருந்த பாதுகாவலர் முகக் கவசம் அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பிக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், தாக்குதல்தாரியைக் கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

#WorldNews

Exit mobile version