Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

பீல்ட் மார்ஷல் பதவி மைத்திரியின் சொத்து அல்ல: சரத்பொன்சேகா கொந்தளிப்பு!

Share

எனக்கு திறமை, தகைமை இருப்பதால் தான் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய சரத் பொன்சேனா எம்.பி., பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வெளிசேகர வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.

” எனது குணம் பற்றி தெரிந்ததால்தான் நல்லாட்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படவில்லை என சரத் வீரசேகர கூறினார். அது உண்மைதான். ஏனெனில் எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தால் தவறிழைத்தவர்களை தப்பிக்க விட்டிருக்கமாட்டேன்.

சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்கினால், பொன்சேகா தன்னைதான் முதலில் கைது செய்வார் என மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் அன்று அச்சம் வெளியிட்டிருந்தார். எனவே, பதவி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளவில்லை.” -என்றார்.

இதன்போது குறுக்கீடு செய்த சாந்த பண்டார எம்.பி.,

” மைத்திரிபால சிறிசேனதான் உங்களுக்கு பீல்ட்மார்ஷல் படடத்தை வழங்கினார். அந்த நன்றிகூட உங்களுக்கு இல்லையா” என கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர்,

” ஜனாதிபதி பதவியை வகித்த நபர், எனக்கு தகைமை இருந்ததால் அதனை வழங்கினார். பீல்ட்மார்ஷல் பட்டம் என்பது மைத்திரியின் பொலன்னறுவையில் உள்ள சொத்து அல்ல.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...