உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

21 617419a735662 600x375 2

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே கூறியவை வருமாறு,

நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக மௌனம் காக்க முடியாது. சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்ததற்கு துறைசார் அமைச்சரும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமே பொறுப்பு கூறவேண்டும்.

மக்கள் பணத்திலிருந்து சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை வழங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட நபர்கள் தான் அதனை செலுத்த வேண்டும்.

அதேவேளை, சேதன பசளை மற்றும் திரவ உரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழு அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.” -என்றார்.

 

#SriLankaNews

Exit mobile version