சடலமாக மீட்கப்பட்ட 07 பிள்ளைகளின் தந்தை!

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் 07 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செங்கலடி தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில் உடலமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Batti Death 01

குறித்த பகுதியில் உள்ள மணல் சுழற்சி பண்ணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் வடிந்தோடும் கால்வாயினுள் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version