பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!!
பிரபல சிங்கள மொழி பாடகரும் ஜிப்சீஸ் (Gypsies) இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா (வயது-69) உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
சுனில் பெரேரா இலங்கையின் சிங்கள இசைக்குழுக்களின் முன்னோடியாக திகழ்ந்தார்.
சிங்கள மொழி இசைத்துறையில் சிறந்த பாடகராகவும் கிட்டார் வாசிப்பாளராகவும் திகழ்ந்ததுடன், பாடலாசிரியராகவும் அவர் பிரதிபலித்த ஒருவர்.
ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான சுனில் பெரேரா , குழு இசையினூடாக சர்வதேச அரங்கில் அறியப்பட்டு, இலங்கையின் நாமத்தை உலகறிய செய்தவராவார்.
1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சுனில் பெரேரா, சமூக அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடியவர், தனது பாடல்களூடாக சமூக விழிப்புணர்வுக்கான விடயங்களைகருத்துக்கைளை தொடர்ச்சியாக முன்வைத்தார்.
பிட்டி கொட்டபங் நோனா, கொத்தமல்லி, மகே நேர்ஸ் நோனா உள்ளிட்ட பாடல்களூடாக சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தவரே சுனில் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment