பிரபல ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்டு 12 ஆண்டுகள்! – தலைமுடியை காணிக்கை செலுத்தி மனைவி வழிபாடு

இலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி முகத்துவாரம் காளி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்காமையினால் அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்றையதினம் முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவருக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

பிரபல ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 – ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM

#SriLankaNews

Exit mobile version