நேற்றைய தினத்தைப் பொறுத்தவரையில் உலகளாவிய ரீதியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது.
சர்வதேச ரீதியாக கொரோனாத் தொற்றால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 22 கோடி 54 லட்சத்து 46 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆகக் காணப்படுகின்றது.
அதேசமயம், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 கோடி 20 லட்சத்து 8 ஆயிரத்து 132 ஆகக் காணப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்காவில் 35 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் 31 ஆயிரம் தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளார்கள்.
Leave a comment