உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 டொலர்களால் குறைவடைந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 818 டொலராக இருந்த நிலையில் தற்போது ஆயிரத்து 789 டொலராக குறைந்துள்ளது.
இதேவேளை – கொழும்பு செட்டியார் தெரு சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் ஒரு லட்சத்து 21 ஆயிரத்தின் 500 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நாளடைவில் இந்த விலைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment