கடும் வெப்பமான காலநிலை தற்போது நிலவுவதால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30 நாட்களில், நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 180 மில்லியன் கனமீற்றர் நீர் வெளியிடப்பட்டு அதன்மூலம் 85 மணித்தியால வோட்ஸ் அளவிலான மின்னுற்பத்தியை மேற்கொண்டு தேசிய வலைப்பின்னலில் சேர்க்கப்படும்.
சாதாரணமாக தேசிய மின்கட்டமைப்பிற்கு சுமார் 85 ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி 2.5 முதல் 3.00 கிகாவாட் மணிநேரம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது – என அவர் தெரிவித்தார்.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆகவும் கூடுதலான கொள்ளளவு கடல் மட்டத்தில் இருந்து 438 மீற்றர்களாகும். கடந்த 28ஆம் திகதி, இது 423 மீற்றர்களாக இருந்தது.
நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்கொள்ளளவு 723 கன மீற்றர்களாகும். இது கடந்த 28ஆம் திகதி 421.7 மீற்றர்களாகவிருந்தது.
#SriLankaNews