இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி நளினிக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது நளினி தனது தாயார் பத்மாவுடன் பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். தொடர்ச்சியாக 6 முறை நளினிக்கு ஜாமின் நீடிக்கப்பட்ட நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப இருந்தார்.
இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் ஜாமின் நீடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நளினிக்கு 7-வது முறையாக மேலும் 30 நாட்கள் ஜாமின் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
#India
Leave a comment