நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் தினந்தோறும் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த விசாரணைகளின் நிமித்தம், ஜனாதிபதி ஆணைக்குழுவினர் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நாளுக்கு நாள் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராய 8 பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment