ஆபாசப்படம் காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் – இளைஞனுக்கு மறியல் !

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் .

குறித்த இளைஞன் நேற்று (29) வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று அங்கு பணியாற்றிவரும் நிலையில் குறித்த சிறுமி தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று சிறுமி தனிமையில் இருந்த வேளையில் அங்கு சென்ற இளைஞன் தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தினைக்காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்ததனைத்தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் இன்று (30) கைது செய்யப்பட்ட இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version