திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய சந்தேக நபரினை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது .
இன்று (29) மூதூர் நீதிமன்ற நீதிவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
முட்டுச்சேனை, மாவடிச்சேனை,வெருகல் பகுதியினைச் சேர்ந்த 20 வயதான நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அப் பகுதியினைச் சேர்ந்த பதினேழு வயதான யுவதியோடு பழக்கம் ஏற்படுத்திய பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்ப்ப்பட்ட யுவதியுடைய பெற்றோரால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட யுவதி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a comment