Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

விரைவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு! – சீறுகிறார் விமல்

Share

இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன், இந்த அரசின்கீழ் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டோம் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரட்டை குடியுரிமைக் கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதனை நம்பினோம். ஆனால் அந்த உறுதிமொழி மீறப்பட்டது.

பஸில் ராஜபக்ச என்பவர் சூழ்ச்சிக்காரர். நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர். காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராக தங்காலையில் போட்டியிட்டவர் அவர். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியவர். அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை.

அமைச்சு பதவி என்பது தற்காலிகமானது, அது பறிக்கப்பட்டதையிட்டு நான் கவலை அடையவில்லை. இலங்கையில் இனி குடும்ப அரசியலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. குடும்ப ஆட்சி என்பது இத்துடன் நிறைவுக்கு வரும். ” – என்றார் விமல் வீரவன்ச.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...