லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

Maaverar Naal london 02

பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதுடன், அஞ்சலியையும் உணர்வுப்பூர்வமாக செலுத்தியுள்ளனர்.

மாவீரர் நாள் நினைவேந்தலை, நாங்கள் நினைவு கூருகின்றோம் எனப் பொருள்படும் ஆங்கில வாசகங்கள் அடங்கிய சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் ஏராளமாக சொரியப்பட்டிருந்தது.

பிரித்தானிய தலைநகர் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version