இலங்கையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதாவது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த போலி விண்ணப்பப் பத்திரமானது சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்படவில்லை.
எனவே இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a comment