எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது.
குறித்த அழைப்பானது, கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு அறிய அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாதென்பதால், இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு இந்திய தரப்புக்கு சஜித் கூறியுள்ளாரெனவும் அறியமுடிகின்றது.
#SriLankaNews