எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுலாக வாய்ப்புக்கள் உள்ளன என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், அனல் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள் வரும் திங்களுடன் தீர்ந்து விடும். இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய் முதல் நாட்டில் இரவு வேளையில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன. இந்த நிலையில் வரும் செய்வாய் முதல் சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு தேசிய மின் கட்டமைப்பிற்கு ஏற்படும்.
மின் துண்டிப்பு தொடர்பான விபரங்கள் திங்களன்று அறிவிக்கப்படும் எனவும் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment