விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பில் நடந்த குளருபடி.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
விஜய் டிவி தற்போது தமிழ் சின்னத்திரையில் இரண்டாவது பெரிய சேனலாக இருந்து வருகிறது. ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவி தான் இருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவி செய்திருக்கும் ஒரு விஷயம் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது. ஈரமான ரோஜாவே சீரியல் 2ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று அந்த சீரியலை டிவியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடை அப்படியே மீண்டும் நேற்று ஒளிபரப்பி இருக்கின்றனர். இவ்வளவு பெரிய சேனலில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவி இது பற்றி தற்போது ஒரு வருத்தம் தெரிவித்து இருக்கிறது. நேற்றைய எபிசோடு இன்று ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
Comments are closed.