யாழ். கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (2) அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews