Susil
செய்திகள்அரசியல்இலங்கை

விமர்சனத்தின் எதிரொலி! – அநாதையாக்கப்பட்டுள்ள சுசில்

Share

அரசை கடுமையாக விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தற்போது அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார்.

அவரை பதவி விலக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்தபோது, சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியிலுள்ள சில பங்காளிக்கட்சிகள் சுசில் பக்கம் நின்றன. இதனால் தெற்கு அரசியலில் சுசில் புதிய புரட்சி செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சுசிலுக்கு ஆதரவாக எவரும் கதைப்பதில்லை. நிகழ்வுகளுக்குகூட அவரை அழைப்பதில்லையாம். இதனால் அவர் மனம் நொந்துபோய் உள்ளார். தினமும் உயர்நீதிமன்றம் செல்லும் அவர், சில முக்கியமான வழக்குகளை தற்போது கையாண்டுவருகின்றார்.

ஆனால் இது சுசிலின் தந்திரோபாய பின்வாங்கல் என்றும், தருணம்வரும்போது, அவர் அதிரடி காட்டுவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...