அவுஸ்ரேலியாவில் நிலநடுக்கம்!
அவுஸ்ரேலியா- கிழக்குமெல்பனின் மென்ஸ்பிட் நகருக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட இந் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னியூட்டாக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கட்டடங்கள் பல சேதமாகியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் சிட்னி, விக்டோரியா,கன்பெரா, தஸ்மெனியா மற்றும் நியுசவுத்வேல்ஸ் முதலான பகுதிகளிலும் இந்நில அதிர்வு உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment