கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
குறித்த விஜயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளும் இணைத்திருந்தனர்.
#SriLankaNews