Manivannan 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ்த் தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்!!!

Share

தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்றுபட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஊடக பேச்சாளருமான வி. மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கடந்த 9.11.2021 அன்று வவுனியாவில் நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தேசிய அரசியல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகின்றது.

அதன் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிதைத்து அழிக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் தேசியவாத சக்திகளை சிதைத்து அழிக்கும் வகையில் நிகழ்த்தப்படும் இச்சதித் திட்டங்களை முறியடித்து தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்றுபட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது.

அண்மை காலத்தில் எமது அமைப்பிற்குள் இருந்து அமைப்பை சிதைப்பதன் மூலம் தமிழ் தேசிய சக்திகளை பல கூறிடும் சதித்திட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் விரும்புகின்ற வைகயில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கின்ற கட்சிகளின் ஒற்றுமையினைக் குலைத்து சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்த்தேசிய அரசியலைக் கூறுபோடுகின்றமை சிங்கள தேசியவாதத்தை வலுப்படுத்துகின்றது.

அந்த வகையில் இக் காலத்தின் தேவையறிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது என இக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கும் கட்சிகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமனதுடன் பங்குபற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றும், எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலினை சிதைக்காத வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையுமையுடன் பயணித்து எமது அரசியல் இலட்சியத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் வென்றெடுக்க போராடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் இக்கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....