அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்குதல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் சீனியை கொள்வனவு செய்யும்போது, தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சதொச நிறுவனம் மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a comment