பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம் திகதி, பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது.
அதனை பாகிஸ்தான் கடற்படை கண்டறிந்து தடுத்து நிறுத்தியது. இவ்வாறான சம்பவம் இது மூன்றாவது முறை.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச்சிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த காணொலியும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இந்திய இராணுவம் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#world