ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை ஈராண்டுகளுக்கு நீடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்துள்ள யோசனைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
“டயானா கமகேவுக்கு ஏதாவது காய்ச்சல் வந்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி கூறுகின்றார். இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு என்னவென அறியவேண்டும்.
நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிக்ககூடாது. அவ்வாறு நீடிக்கப்போய், ஜேஆருக்கு என்ன நடந்தது?
நான் பதவி காலத்தை குறைத்த ஜனாதிபதி. எனவே, நீடிப்புக்கு ஆதரவளிக்கமாட்டேன்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment