நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கட்சியின் ஒழுக்காற்று குழுவாழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கடசியின் செயற்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியாக தெரிவுசெய்யப்பட்ட டயானா கமகே, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment