புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துச் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
காலை, மாலை எனப் பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாகி, போதிய வெளிச்சமின்மையால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது.
கடும் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, புதுடெல்லியில் இன்று மட்டும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 300 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானச் சேவைகளைப் போலவே, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டத்தால் பல ரயில்கள் காலதாமதமாகவே புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களை ஓட்டுபவர்களும் பொதுமக்களும் இந்தப் பனிமூட்டம் காரணமாகப் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.