உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.
தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்து, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக மும்பை பொலிஸில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் பொலிஸார் குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை மிரட்டலால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
#India
Leave a comment