மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை பெற்ற நிலையில், கடந்த 27 ஆம் திகதி திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment